சிகிச்சை பெற்று வரும் தந்தை.. அதிரடி பதிவை வெளியிட்ட மகள் இந்திரஜா.. ரசிகர்கள் ஷாக்!
ரோபோ ஷங்கர்
சின்னத்திரையில் களமிறங்கி தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர். வெள்ளித்திரையில் நடிக்க களமிறங்கியவர் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் முன்னணி காமெடி நடிகராக மாஸ் காட்டி வருகிறார்.
இடையில் உடல் நலக் குறைவால் கேமரா பக்கம் வராமல் இருந்தவர் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது மகள் இந்திரஜாவும் பிகில் படம் மூலம் களமிறங்கி சில படங்கள் நடித்தார்.
சில வருடம் முன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். முன்னதாக ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின் உடல்நலம் சரியாகி சினிமாவில் ஆக்டீவாக இருந்து வந்தார். தற்போது திடீரென அவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் ஷாக்!
ஒரு பக்கம் தந்தை ரோபோ சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்திரஜா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நேரம் நல்லா இல்லனா தேவையில்லாதவன் கூட தேவை இல்லாம பேசிட்டு போவான்" என்று பதிவிட்டுள்ளார்.