சூப்பர் ஸ்டார், தளபதிக்கு மேல ஒருத்தர் இருக்கார்!! ரோபா சங்கரால் போட்டிக்கு ரெடியான சிவகார்த்திகேயன்...
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக பலர் போட்டிப்போட்டு வந்த நிலையில் பல பிரபலங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி வந்தனர். இந்த விசயம் இணையத்தில் பெரிய வாக்குவாதமாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார், தளபதிக்கு மேல் ஒருத்தர் இருக்கார் என்று உடல்நிலை சரியில்லாமல் இருந்து தற்போது மீண்டு வந்த நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்திருகிறார். தலைவர்னா அது சூப்பர் ஸ்டார் தான் என்றும் தளபதின்னா அது விஜய் தான் என்றும் அதை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
அதன்பின் வரும் நடிகர்கள் அந்த இடம் காலியாக இருக்கும் போது அவர்களுக்கு போகலாம். அடுத்த தலைமுறையினருக்கு தளபதி தான். சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து தளபதி தான் எனவும் எல்லோருக்கும் பிடித்த நடிகர் விஜய் தான் எனவும் கூறியிருக்கிறார்.
ஆனால், இவர்களுக்கு எல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார் என்றால் எங்களுடைய ஆண்டவர் தான் அது உலக நாயகன். மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.
ரோபோ சங்கர் இப்படி பேசியதை வைத்து இணையத்தில் பல நடிகர்களின் ரசிகர்கள் கருத்து கூறி வந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள்.
விஜய்க்கு இப்பவே 50 வயதாகிவிட்டது அடுத்த சூப்பர் ஸ்டார் எல்லாம் கிடையாது. எங்க அண்ணன் சிவகார்த்திகேயன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் கூறி வருகிறார்கள்.