ரோபோ ஷங்கர் குடும்பத்துடன் இருக்கும் இவர் யார் தெரியுமா?
ரோபோ ஷங்கர்
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது திறமையை வெளிக்காட்டியவர் அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தார். கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் உடல்நிலை சரியாகி படங்கள் நடிக்க தொடங்கியிருந்தார். திடிரென மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேற்று இரவு உயிரிழந்தார்.
பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். ரோபோ ஷங்கர் - பிரியங்கா தம்பதிக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். சமீபத்தில், இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்து, சில நாட்களில் காதணி விழா நடத்தவும் திட்டமிட்டிருந்தார் ரோபோ ஷங்கர்.
இந்து சிவராமன்
இந்நிலையில் ரோபோ ஷங்கர் வீட்டில் இன்னொரு மகள் இருந்திருப்பார். இவர் ரோபோ ஷங்கரின் வீட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருப்பார்.
ரோபோ ஷங்கர் வீட்டிலேயே வளர்ந்து வரும் இவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரோபோ ஷங்கரின் இரண்டாம் மகள் என்று பலரும் நினைத்திருப்பார்கள், ஆனால் அது உண்மையில்லையாம்.
இவர் ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் தானாம். ரோபோ ஷங்கரின் அண்ணன் சிவராமனுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். அந்த மகள் தான் இந்த இந்து சிவராமன். கல்லூரி முடித்துவிட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேல் ரோபோ ஷங்கரின் வீட்டில் வசித்து வருகிறாராம் இந்து.
என் அப்பாவைவிட்டுக்கூட இருப்பேன், ஆனால் சித்தப்பாவை விட்டு இருந்ததில்லை என்று இந்து கூறியிருந்தார். ரோபோ ஷங்கர் இருந்தநிலையில், இணையத்தில் லவ் யூ சித்தப்பா என்று இந்து பகிர்ந்துள்ளார்.
