ஒல்லியாக இந்த கெட்ட பழக்கம் தான் காரணம்!! ரோபோ சங்கர் கூறிய உண்மை..

Robo Shankar Tamil Actors
By Edward Jun 13, 2023 11:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், அதன்பின் வெள்ளித்திரையில் ஜொலித்து வந்தார். உடல் எடையை படுமோசமாக மாறி ஒல்லியானதோடு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

அவரின் புகைப்படத்தை பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி என்று ஆச்சரியப்பட்டு அதிர்ச்சியாகினர். ஆனால் அவர் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாக ரோபோ சங்கர் மனைவி கூறியிருந்ததை பலரும் நம்பவில்லை.

ஒல்லியாக இந்த கெட்ட பழக்கம் தான் காரணம்!! ரோபோ சங்கர் கூறிய உண்மை.. | Robo Shankar Open Why Body Loss Behind Reasons

இந்நிலையில் தனக்கு என்ன ஆனது மற்றும் எதனால் உடல் எடை குறைந்தது என்று ரோபோ சங்கர் பதிலளித்துள்ளார். என்னிடம் சில தவறான பழக்கங்கள் இருந்ததாலும் அதனால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு உடல் எடை குறைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது அந்த பழக்கங்களை நிறைத்துவிட்டேன் என்றும் நீங்களும் அதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார் ரோபோ சங்கர்.

Gallery