நான் செத்துட்டேன்னு மாலையுடன் வீட்டுக்கு வந்தாங்க!! ரோபோ சங்கர் எமோஷ்னல்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராகவும் திகழ்ந்து வரும் ரோபோ சங்கர், பல பட நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். தனக்கு மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்ட போது உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியது குறித்து பேசியுள்ளார் ரோபோ சங்கர்.
நான் செத்துட்டேன்னு
அதில், நான் மருத்துவமனையில் இருக்கும்போது சிலர் நான் இறந்துவிட்டதாக நம்பி என் வீட்டிற்கு மாலையுடன் வந்திருக்கிறார்கள். செய்தி சேனல், யூடியூப் சேம்னல் என்று நான் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியது.
இதைக்கேள்விப்பட்டு பலர் வீட்டுக்கு வந்ததும் என் மனைவி, எனக்கு போன் செய்து வருத்தமாக பேசினார். மாலை பூ கொண்டு வந்தவர்களிடம், மாலையை அவங்களுக்கே போட்டு அனுப்பு, நான் இப்ப வரேன் என்று சொல்லியிருந்தேன்.
ஒருவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவினால், அவர்களிடன் மீதமுள்ள வாழ்க்கை மறுபிறவிக்கு சமம். அதுபோல எனக்குச் சில மறுப்பிறப்புகள் கிடைத்திருக்கிறது என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார் ரோபோ சங்கர்.