திருமண வயதில் மகள் இருக்கையில் 2வது குழந்தைக்கு ரெடி!! மனைவி முன் உளறிய ரோபோ சங்கர்..

Vanitha Vijaykumar Robo Shankar
By Edward Jun 22, 2023 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் பல மேடை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

அதன்பின் திரைப்படங்களில் சிறு ரோலில் நடித்து வந்த ரோபோ சங்கர், அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறினார்.

ரோபோ சங்கர் அதிகமாக எடுத்துக்கொண்ட மதுவின் பின்விளைவால் மஞ்சள் காமெலை ஏற்பட்டதால் தான் உடல் எடை குறைந்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் அவரது மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்ற செய்தியும் வெளியானது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அடுத்த பாப்பாவுக்கு ரெடி பண்ணிட்டு தான் இருக்கிறேன்.

நைட் ஷூட்டிங்கிற்கு போகுறதால முடியல என்று கூறியுள்ளார். இதற்கு வனிதா சரியான ஒன்றுதான், திரும்பவும் நியூஸ்ல வருவோம் என்று தெரிவித்துள்ளார்.