தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிய இந்த கெட்டபழக்கம் காரணமா!! அதிர்ச்சி கொடுத்த ரோபோ சங்கர்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர். சில மாதங்களுக்கு முன் அதிகப்படியான மதுப்பழக்கத்தால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுமோசமாக உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
இதுகுறித்து சமீபத்தில் விளக்கமும் அளித்தார் ரோபோ சங்கர். இதனைதொடர்ந்து நோயில் இருந்து மீண்டு வருவதாகவும் நீங்களுக்கு கெட்ட பழக்கத்தை தவிருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பார்ட்னர் படத்தின் டிரைலர் நிகழ்ச்சியில் கூட நடிகை ஹன்சிகாவின், கால்-ஐ தடவ நானும் இயக்குனரும் கெஞ்சியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் நடிகர் தனுஷ் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
மாரி படத்தின் போது தனுஷ், அந்த சமயத்தில் குடுப்பழக்கம் இருந்ததாகவும், ஆனால் அதை சுதாரித்துக்கொண்டு ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு இருந்த குடிப்பழக்கம் தனுஷுக்கும் இருந்தது என்று கூறியது தற்போது சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தனுஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் தான் அவரது மனைவி ஐஸ்வர்யா பிரிய காரணமாக இருக்குமோ என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.