ஒரு வருஷம் தான் அப்புறம் டிவோர்ஸ்!! கூல்-ஆக பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா..

Robo Shankar Gossip Today Tamil Actors Tamil Actress Indraja Shankar
By Edward Jun 15, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய மகள் இந்திரஜாவை விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா ரோலில் நடிக்க வைத்து அறிமுகம் செய்து வைத்தார். அப்படத்தின் மூலம் பிரபலமான இந்திரஜா, பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் தன்னுடைய மாமா கார்த்திக் என்பவரை பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து அசத்தினார். இவர்களின் திருமணத்தை பலர் விமர்சித்தபடி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

ஒரு வருஷம் தான் அப்புறம் டிவோர்ஸ்!! கூல்-ஆக பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.. | Roboshankar Daughter Indraja Reply Negative Msg

சமீபத்தில் தன் கணவருடன் அளித்த பேட்டியொன்றில் நெகட்டிவ் கமெண்ட் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். ஒரு நபர் அவர்களின் புகைப்படத்திற்கு இது வெறும் ஒரு வருஷம் தான் அப்புறம் விவாகரத்தாகிவிடும் என்று கூறி மெசேஜ் செய்துள்ளார். அதற்கு இந்திரஜா, இவங்களாம் டீசெண்ட்-ஆ போட்டிருக்காங்க, இதைவிட மோசமா இருக்கும், இவங்களும் ஒரு பொண்ணு தான்.

இந்தமாதிரியான சமத்துவம் பேசிபேசி இவ்வளவு வன்மத்தை கக்கும் அளவிற்கு மாறிவிட்டார்கள். இது தனிப்பட்ட முறையில் எனக்கு கஷ்டமாக இருந்தது. அதுவும் ஒரு பெண்ணாக இருந்துட்டு வன்மத்தை கக்குறீங்களே என்று எனக்கு கஷ்டம். ஒரு வருஷம் தான் சொல்றீங்கள்ல, சத்தியமா அப்படி நடக்காது, வாய்ப்பில்லை.

ஒரு வருஷம் தான் அப்புறம் டிவோர்ஸ்!! கூல்-ஆக பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.. | Roboshankar Daughter Indraja Reply Negative Msg

அதெல்லாம் நடக்காது என்பதற்காக, தாலியில் மூன்று முடிச்சோடு கூடவே மூணு முடிச்சு போட்டுவிட்டார். கல்யாணத்தில் மூணு முடிச்சு போடும் போது யாரும் கையை வெட்கவே கூடாது என்று சொல்லிவிட்டு தான் தாலி கட்டினார். அதைவிட நாங்கள் சூப்பராக வாழுவோம் என்று கூறியிருக்கிறார்.

ஒரு கல்யாணத்துக்கு அவர்களுக்கு வைக்கும் போது கொடுப்பவர்களுக்கு இவன் இப்படிதான் நினைப்பானோ என்ற மனநிலை அவன் மீது வரும் என்று இந்திரஜா கணவர் கூறியிருக்கிறார்.