தனுஷ் மகனுக்கு ஒரு நியாயம் இவங்களுக்கு ஒரு நியாயமா!! ரோஹினி தியேட்டரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Silambarasan Viral Video Pathu Thala
By Edward Mar 30, 2023 08:15 AM GMT
Edward

Edward

Report

தீண்டாமை கொடுமை பல இடங்களில் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் அதை கவனிக்காத ஒரு இடமாக இருப்பது திரையரங்கம். அப்படியொரு சம்பவம் இன்று சென்னை தியேட்டர் ஒன்றில் நடந்துள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படியொரு சூழலில் சென்னை கோயம்பேடு பகுதிக்கு அருகில் இருக்கும் ரோஹினி தியேட்டரில் இன்று காலை முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது.

ரசிகர்களோடு ரசிகர்களாக குறவர் சமுகத்தை சார்ந்த குடும்பத்தினர் தங்களுக்கு பிள்ளைகளுடன் பத்து தல படம் பார்க்க டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் திரையரங்க ஊழியர்கள் டிக்கெட்டை வாங்க மறுத்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் ஒருவர் இதை தட்டிக்கேட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதற்கு பல எதிர்ப்புகள் தியேட்டர் நிறுவனத்தின் மீது வந்தவண்ணம் இருந்து. ஊழியரின் இந்த நடவடிக்கை குறித்து ரோஹினி தியேட்டர் விளக்கம் அளித்துள்ளது.

தனுஷ் மகனுக்கு ஒரு நியாயம் இவங்களுக்கு ஒரு நியாயமா!! ரோஹினி தியேட்டரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. | Rohini Theare Behavour Trolls Video Viral

அதில் ஊழியர்கள், வந்தவர்களின் குழந்தைகளுக்கு 2, 6, 8 மற்றும் 10 வயது இருப்பதாலும் படம் U/A சான்றிதழ் பெற்றதால் சட்டப்படி அவர்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்று கூறியிருந்தனர். இதற்கு நெட்டிசன் ஒருவர் தர்பார் படத்தின் போது தனுஷின் மகனுக்கு 10 வயதிற்குள் தான் இருக்கும்.

அப்படமும் U/A சான்றிதழ் பெற்றம் தான். அவர்களை மட்டும் ரோஹினி தியேட்டர் எப்படி அனுமதித்தது என்று கேட்டுள்ளார்.

இதேபோல் பலவிதத்தில் ரோஹினி திரையரங்கை நெட்டிசன்கள் வெச்சு கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். தியேட்டரிலும் தற்போது தீண்டாமை கொடுமை உருவெடுத்துவிட்டதா என்று சமுக ஆர்வலர்கள் கண்டித்தும் வருகிறார்கள்.

GalleryGallery