வீரர்களை படுகேவலப்படுத்தும் ரோஹித் சர்மா.. தோனியிடம் கத்துக்கோங்க என்று விமர்சிக்கும் ரசிகர்கள்..

MS Dhoni Rohit Sharma Virat Kohli Asia Cup 2022
By Edward Sep 07, 2022 03:20 PM GMT
Report

ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. சூப்பர் 4 அணிகளுக்கான போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானிடம் சில நாட்களுக்கு முன் தோல்வியை சந்தித்த இந்திய அணி நேற்று நடந்த இலங்கை ஆட்டத்திலும் தோல்வியை கண்டது.

இரு ஆட்டத்தில் கடைசி ஓவரில் செய்த தவறுகளால் தான் தோல்வியை சந்தித்தது. இதனால் கேப்டன் ரோஹித் கோபத்தை கடுமையாக வீரர்களிடம் காட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது பந்தை தவறவிட்ட புவினேஷ்வர் குமார் கீழே விழுந்தபோது தன் காலால் ரோஹித் தட்டிவிட்டுள்ளார். மேலும் பந்தை போடப்போகும் முன் ஒரு கோரிக்கை கேட்க வந்த ஆர்ஷீப் சிங்கை அவமதித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குள்ளாகி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

கேப்டனாக இருந்து சக வீரர்களை அவமானப்படுத்துவது சரியில்லை என்றும் கிரிக்கெட் ஆட்டத்தில் எப்போது பொறுமை வேண்டும் என்று தோனியிடம் போய் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் ரோஹித்தை கண்டபடி இந்திய ரசிகர்கள் விமர்சித்து திட்டி வருகிறார்கள்.