ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!! ரம்யா கிருஷ்ணன் இப்படி பண்ணுவாங்கன்னு தெரியாது!! ரோஜா ஓபன் டாக்..
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ரோஜா, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டியொன்றில், செம்பருத்தி படத்தில் நான் நடிக்க வந்தபோது எனக்கு எதுவுமே தெரியாது, அப்படத்தின் கதையும் தெரியாது.

அந்த சமயத்தில் நீங்க ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். அப்போது எனக்கு அவருடைய படங்கள் எப்படி இருக்கும் என்றுகூட தெரியாது. அதுபோல் செம்பருத்தி படத்தின் கதையும் தெரியாது. அந்த நேரத்தில் ஆர் கே செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தை போய் பார்த்துவிட்டு வாங்க என்று சொன்னார்கள். நானும் தியேட்டருக்கு போயிருந்தேன். அங்கு ஆர் கே செல்வமணி என்ற பெயர் ஸ்கிரீனில் வந்தபோது ரசிகர்கள் எல்லோரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது இவர் பெரிய டைரக்டர் என்று புரிந்துகொண்டேன். அதன்பின் நானும் செம்பருத்தி படத்தில் கமிட்டாகிவிட்டேன். அச்சமயத்தில்கூட எனக்கு இந்த படத்தின் கதை என்னவென்று தெரியாது. நான் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்றும் கிடையாது, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நானும் வந்துவிட்டேன். அப்போது எனக்கு மேக்கப் போடப்பட்டிருக்கிறது, ஆனால் அந்த மேக்கப் எதுவுமே செல்வமணி சாருக்கு பிடிக்கவில்லை.

அதே நேரத்தில் ரம்யா கிருஷ்ணனும் ஆர் கே செல்வமணியும் நல்ல பிரண்ட்ஸ். அதனால் என்னை நேராக ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க, அங்கு இவங்கதான் இந்த படத்தோட ஹீரோயினி, இவங்களுக்கு மேக்கப் எதுவும் செட்டாகல, நீ எதாவது டிரை பண்ணிப்பாரு எனூர் செல்வமணி சொன்னார். உடனே ரம்யா கிருஷ்ணன் எனக்கு சில மேக்கப் போட்டுவிட்டார்.
அது அழகாக வந்தது, உடனே இதையே ஃபைனல் பண்ணிடலாம், இதையே ஃபாலோ பண்ணுங்க என்று சில மேக்கப் பொருட்களும் கொடுத்துவிட்டாங்க. அன்றில் இருந்து இப்போ வரை, எனக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் நட்பு தொடர்ந்து வருகிறது. நாங்கள் எந்த சூட்டிங் போனாலும் அங்கு ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம், ரகளை பண்ணுவோம், இப்போ இருக்கிற நடிகைகள் எல்லாம் இந்த அளவிற்கு பிரண்ட்ஸாக இருப்பாங்களா? என்று எனக்கு தெரியாது, ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் நடிகைகளுக்குள் எந்த ஈகோவும் இருந்தது கிடையாது, யார் மீதும் பொறாமை இருந்தது கிடையாது. எவ்வளவு ஒற்றுமையாக இருப்போம், ஒருவருக்கு ஒருவர் அட்வைஸ் கொடுத்து கொண்டிருப்போம் என்று ரோஜா பேசியுள்ளார்.