ஷங்கர் மகள் அதிதியை தொடர்ந்து கதாநாயகியாகும் அடுத்த வாரிசு நடிகை.. யார் தெரியுமா
Roja
Aditi Shankar
By Karthick Raja
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், அதிதி ஷங்கரை தொடர்ந்து மற்றொரு வாரிசு நடிகை அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை, நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா தான். ஆம், ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளாராம்.

இதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் என பயிற்சி பெற்று வருகிறாராம்.
ஏற்கனவே இவர் எழுதிய ’தி ஃபிளேம் இன் மை ஹார்ட்’ எனும் புத்தம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்திய அளவில் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் அன்ஷுமாலிகா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.