நானும் அவரும் வேறுவேறு ஜாதி!..நாங்க பண்ண தப்பு..நடிகை ரோஜா ஓபன் டாக்..
நடிகை ரோஜா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தங்களின் காதல் சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
அதில், தெலுங்கு படம் ஒன்றில் நான் நடித்துக்கொண்டு இருந்த போது தான், செல்வா என்னிடம் முதன்முதலாக காதலை சொன்னார்.
என்னிடம் காதலை சொல்லிவிட்டு உடனே என் வீட்டிற்கு சென்று அவர்களிடம் நான் உங்கள் மகளை காதலிக்கிறேன், ரோஜாவை திருமணம் செய்து வைத்தால், அவளை நான் நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று கேட்டுவிட்டார்.
இருவரும் வேறுவேறு ஜாதி என்பதால் திருமணத்திற்கு சம்மதிப்பார்களா? என்ற பயம் இருந்தது. ஆனால், என் வீட்டில் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்கள். பின் என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், எனக்கு ஒரு நெக்லஸ் வாங்கி வந்து பரிசாக கொடுத்துவிட்டார்.
பின் என் வீட்டில் ஓகே சொல்லிவிட்டார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நடிகை ரோஜா.