ரோஜா சீரியல் நடிகைக்கு இப்படியொரு நிலையா.. சோகத்தில் ரசிகர்கள்
சன் டிவியில் தொடர்ந்து டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல் ரோஜா. இந்த சீரியலில் அணு என்ற வில்லி கதாபாத்திரத்தில் தற்போது வி.ஜே அக்ஷயா நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆவார். தற்போது விஜே அக்ஷயா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் கடந்த சில நாட்களாக எனக்கு மூச்சு திணறல் இருந்து வந்தது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் தனக்கு கொரோனா வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்று ஆறுதல் கூறுகின்றனர். மேலும் மீண்டும் அணு கேரக்டர் மாற்றப்படுமா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.
