ரஜினி பாட்டையே காப்பி அடித்த ஹாலிவுட் ROSÉ & Bruno Mars! வைரலாகும் வீடியோ..
Report this article
இந்திய சினிமாவில், இசையமைப்பாளர்கள் ஒருசிலர் பழைய படத்தில் இருந்தோ அல்லது ஹாலிவுட் சினிமாவில் இருந்து இசையை காப்பி செய்தி அதை பயன்படுத்துவார்கள். அதை சிலர் கண்டுப்பிடித்து அட்டர் காப்பி அடித்துவிட்டார் என்று கலாய்ப்பதுண்டு. அந்தவகையில், தமிழ் சினிமாவின் பாட்டையே ஹாலிவுட்டில் காப்பி அடித்துள்ள சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கிறது.
ROSÉ & Bruno Mars, APT - Kilimanjaro
ஹாலிவுட் பிரபல பாப் பாடகர்களான ROSÉ & Bruno Mars, APT என்ற பாடலை சமீபத்தில் யூடியூபில் ரிலீஸ் செய்துள்ளனர். தற்போது அந்த பாடல் 400 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை பெற்று டிரெண்ட்டிங்கில் இருக்கிறது.
இந்த பாடல் சில ஹாலிவுட் பாடகர்களின் பாடலை காப்பி அடித்து தான் உருவாக்கியுள்ளனர் என்று கூறி வந்தனர். தற்போது, ரஜினி நடித்த எந்திரன் படத்தில் கிலிமஞ்சாரோ என்ற பாடலின் இசையை அப்படியே காப்பி அடித்துள்ளதாக சிலர் கூறி, ட்ரோல் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.