தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்தி!! மமிதா பைஜு கொடுத்த ரியாக்ஷன்..
Gossip Today
Tamil Actress
Mamitha Baiju
By Jai
மமிதா பைஜு
தென்னிந்திய சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை மமிதா பைஜுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சோசியல் மீடியாவில் பரவி வந்த தகவல் அதிர்ச்சி கொடுத்தது.

மமிதாவின் சகோதரர் மிதுன் பைஜுதான் அவரது வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், காதல் மற்றும் திருமணம் தொடர்பான முடிவுகளைக்கூட சகோதரரே தீர்மானிப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனை பார்த்த மமிதா பைஜு தன்னுடைய எதிர்வினை கருத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்துள்ளார். அதில் Whaat? என்ற வாசகத்துடன் கூடிய மினியன் ஸ்டிக்கரை பகிர்ந்து தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.