13 வயது மூத்த நடிகருடன் வெளிநாட்டில் ஊர் சுற்றும் நடிகை!! வைரலாகும் விஜய் தேவரகொண்டா பட நடிகையின் புகைப்படம்
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 என்ற படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்து பிரபலமானார்.
நடித்தது ஐந்தே படத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகை அனன்யா பாண்டே 24 வயதில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருந்தும் அவுட்டிங் சென்றும் வந்தது பெரியளவில் பேசப்பட்டது.
தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். தற்போது அந்த காதல் ரூமரை தற்போது உறுதிப்படுத்தியதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகை அனன்யா பாண்டே மற்றும் ஆதித்யா ராய் கபூரும், ஸ்பெய்னில் நடைபெற்று வரும் இசைக்கச்சேரிக்கு சென்றுள்ளார்கள் என்றும் இருவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மூலம் அதை நிரூபித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
ஆனால் இதெல்லாம் பொய் என்று அனன்யா பாண்டேவின் அம்மா பாவனா பாண்டே விளக்கியுள்ளார். அனன்யா இன்றுவரை சிங்கிளாக இருக்கிறார். இதுபோன்ற விசயங்கள் தொடர்ந்து நடக்கிறது. சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற விசயம் இருக்கத்தான் செய்யும்.
நேர்மறைகள் நிச்சயமாக எதிர்மறைகளை விட கனமானதாக நான் கருதுகிறேன் என்று அனன்யா அம்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.
