நான் விஜய்யை அப்படி சொன்னனா?.. கோபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் கூறிய விளக்கம்..

Vijay Gossip Today Varisu S. A. Chandrasekhar
By Edward Nov 17, 2022 01:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர். தன் மகன் விஜய்யை, அறிமுகப்படுத்தி அவரை வைத்து பல படங்களை இயக்கி இந்த உச்ச இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் எஸ் ஏ சி.

நான் விஜய்யை அப்படி சொன்னனா?.. கோபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் கூறிய விளக்கம்.. | S A Chandrasekar Open What Happen With Vijay Issue

சிறப்பு பேட்டி

தற்போது எஸ் ஏ சி அவர்கள் நான் கடவுள் இல்லை என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரமோஷனுக்காக நடிகை சாக்ஷி அகர்வாலுடன் ஒரு பேட்டியை கொடுத்து பல விசயங்களை பேசியிருக்கிறார். அப்போது விஜய்யின் பெயர் ஜோசப் விஜய் என்றும் பணத்திற்காக பெற்றவர்களை விஜய் விட்டுவிட்டார் என்று பல விதத்தில் பல வதந்தி செய்திகள் வெளியாவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள், என் பெயர் எஸ் அலெக்ஸ் சந்திரசேகர். நான் வெளியுலகத்திற்கு வரும் போது என்னுடைய கிறிஸ்தவ மதம் இருக்க கூடாது என்று எஸ் ஏ சந்திரசேகர் என்று வைத்துக்கொண்டேன். அதேபோல் தான் வீட்டில் ஜோசப் விஜய், வெளியில் விஜய் - விஜய்யாக தான் இருக்கட்டும் என்று தெரிவித்தார்.

நான் விஜய்யை அப்படி சொன்னனா?.. கோபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் கூறிய விளக்கம்.. | S A Chandrasekar Open What Happen With Vijay Issue

விஜய்யுடன் என்ன பிரச்சனை

கருத்து வேறுபாடு எந்த அப்பா மகனுக்கு இல்லாமல் இருக்கிறது. சண்டை போட்டு பின் அவருடன் சேர்ந்து சாப்பிடுவீங்க. அதேபோல் தான் கருத்து வேறுபாடு இருக்கும் போது சொன்னேன் பின் பேசிக்கிட்டோம் என்று கூறியுள்ளார்.

உடனே இதை அப்படி பேசுறீங்க, பேசிட்டு போங்க, எங்களை வைத்து உங்களுக்கு ஓடுதா என்று கலாய்த்தும் பேசியிருக்கிறார். பணம் சம்பாதித்தால் பெத்தவங்கள மதிப்பதில்லை என்று கூறியது என் மகனை கூறவில்லை.

பொதுவாக கூறினேன். என் மகன் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் எங்களை விட்டுவிட்டார் என்று கூறினேனா? அதை ஏன் இப்படி கேட்கிறீர்கள். என் பிள்ளை விஜய் போல் நல்லபுள்ள உலகத்துலயே இல்லை என்று எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

மேலும் நான் விஜய் படத்தின் பாடலை நான் கேட்கவில்லை யார் விஜய் இயக்குனரை தேர்வு செய்கிறார் என்று எனக்கு தெரியாது. தனிப்பட்ட விதத்தில் நான் என் கருத்து கூறும் போது கோபப்படுவார் மற்றபடி எதுவும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளார்.