விஜய்யை பிளாக்மெயில் செய்யமுடியாது!! எஸ் ஏ சந்திரசேகர் காட்டம்..

Vijay Gossip Today S. A. Chandrasekhar JanaNayagan
By Edward Jan 29, 2026 07:45 AM GMT
Report

விஜய் - ஜனநாயகன்

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகரும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.

விஜய்யை பிளாக்மெயில் செய்யமுடியாது!! எஸ் ஏ சந்திரசேகர் காட்டம்.. | S A Chandrasekhar Open Jananayagan Release Issue

படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் வழக்கால் தள்ளிப்போயுள்ளது. சில நாட்களுக்கு முன் விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வில், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்காக அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய்விட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்தது.

விஜய்யை பிளாக்மெயில் செய்யமுடியாது!! எஸ் ஏ சந்திரசேகர் காட்டம்.. | S A Chandrasekhar Open Jananayagan Release Issue

எஸ் ஏ சந்திரசேகர்

இந்நிலையில் இதுகுறித்து விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர், விஜய்யை பிளாக்மெயில் செய்யமுடியாது என்று கூறியிருக்கிறார்.

படத்தை வைத்து விஜய்யை பிளாக்மெயில் செய்யமுடியாது என்றும் படத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, படத்தைப்பற்றி விஜய் கவலைப்படவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.