அப்பாவுடன் சண்டை..கோபத்தில் காரை எடுத்து கிளம்பிய விஜய்!!! தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்...
இயக்குநர் எஸ் ஏ சி துணையோடு சினிமாவுக்குள் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் வளர்ந்த விஜய் தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக சாரில் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டிபோடவுள்ளார். அதற்கான பல வேலைகளை மும்முரமாக செய்து வரும் விஜய், சமீபகாலமாக பல சிக்கல்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

விஜய் குறித்து பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு விஜய் பற்றி பகிர்ந்துள்ளார்.
அப்பாவுடன் சண்டை
அதில், விஷ்ணு படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேர் நின்றிருந்தார்கள். கேமரா ரோலில் இருக்கிறது. அப்போது சந்திரசேகருக்கும் விஜய்க்கும் சண்டை வந்துவிட்டது. எல்லோருமே அதை பார்த்தவர்கள். விஜய்யோ கோபமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். எங்கே சென்றார் என்றே தெரியவில்லை.

பின் அவரது அம்மா ஷோபா சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தார். விஜய் பற்றி அவரது நண்பர்களிடம் கேட்டேன், அவர்கள் சின்னது மேற்கொண்டு அதிர்ச்சி தந்தது.
அதாவது ஒரு ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, விஜய்க்கு பிடிக்காத விஷயத்தை பேசி சிரித்துவிட்டால்போதும், உடனே கையில் என்ன கிடைக்கிறதோ அதைத்தூக்கி போட்டுவிட்டு சென்றுவிடுவார். கதவையும் வேகமாக சாத்திவிட்டு செல்வாராம். அப்படி நடந்தால் 3 மாதங்கள் வரைக்கூட பேசாமல் இருப்பார் என்று தன்னிடம் விஜய் நண்பர்கள் கூறியதாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.