54 வயதில் திருமணமா? சேதியை கேட்டு ஷாக்கான நடிகர் எஸ்ஜே சூர்யா...
தமிழ் சினிமாவில் வாலி, குஷி போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமாத்துறைக்கு வந்து நடிகர் அஜித் வாய்ப்பு கொடுத்ததில் எஸ் ஜே சூர்யா இயக்குனராகினார்.
அதன்பின் இரு படத்தின் இந்தி, தெலுங்கு ரீமேக்கை எடுத்தார். இவ்விரு படங்களுக்கு பிறகு இயக்கத்தை விட்டு விட்டு நடிகராக கலமிரங்கி நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்கள் மட்டுமே செட்டாகி வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்ததால் ஒதுக்கப்பட்டார்.
அதன்பின் மெர்சல், ஸ்பைடர், மாநாடு, டான் போன்ற படங்களில் வில்லனாகவும், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, கடமையை செய் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். தற்போது 54 வயதாகவும் எஸ் ஜே சூர்யா இன்னும் சிங்கிளாக இருந்து திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் என்ற செய்தி இணையத்தில் வைரலாகியது. இதனை அறிந்த எஸ் ஜே சூர்யா, அப்படியொரு நினைப்பே இன்னும் எனக்கு வரவில்லை. சினிமாவில் இன்னும் சாதிக்கனும், முரட்டு சிங்கிளாகவே இருக்க ஆசைப்படுகிறேன். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.