யார்ரா நீ! எஸ்.ஜே சூர்யா மீது கேஸ் போடப்போகும் மாணவர்..இதுதான் காரணம்..

ajith vijay pawankalyan vaali maanaadu kushi S J Suryah khushi
By Edward Jan 05, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக அஜித் மற்றும் விஜய் படங்களை இயக்கி மிரளவைத்தவர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நடிகர் அஜித்தின் வாளி படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமாகி பின் விஜய்யை வைத்து குஷி படத்தை கொண்டாடியவர்.

குஷி படத்தின் வெற்றியால் அப்படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இதன்பின் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகனாக ஜொலித்து வந்தார். தற்போது வில்லன் அவதாரம் எடுத்து வரும் சூர்யா, மாநாடு படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்து பிரம்பிக்க வைத்தார்.

இப்படத்தின் ஹிட்டால் சமீபத்தில் ஊடகத்தில் பணியாற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், குஷி என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கி வெற்றி கொடுத்தீர்கள்.

அப்படத்திற்கு பிறகு 10 வருடங்கள் பவன் கல்யாண் தோல்வியை சந்தித்தார். அப்படி சந்தித்தாலும் பவன் கல்யாண் ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அதற்கு காரணம் குஷி என்ற படம் தான். அப்படி இருக்கையில் ஏன் இயக்குவதை விட்டுவிட்டீர்கள்.

அதனால் உங்கள் மேல் கோபம் கேஸ் போடவும் போகிறேன் என்று அந்த மாணவர் கூறியுள்ளார். இதற்கு எஸ்.ஜே. சூர்யா ஒரு கதை இருக்கிறது நான் இயக்குவேன் என்று குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.