சச்சின் பட வெற்றி, ஜெனிலியா தோழியாக நடித்தது நான் தான்.. திடீரென வெளியான வீடியோ

Vijay Genelia D'Souza Tamil Cinema Viral Video
By Bhavya Apr 21, 2025 12:30 PM GMT
Report

சச்சின்

காலம் கடந்து நம் மனதில் சில திரைப்படங்கள் மட்டும் தான் நிற்கும். அப்படி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமாவை நேசிக்கும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்த படம்தான் சச்சின்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவானது. இந்த படத்தில் விஜய் - ஜெனிலியாவின் ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதைவிட வடிவேலு - விஜய்யின் கம்போ வேற லெவலில் இருக்கும். ஒவ்வொரு முறையும் இப்படத்தை பார்க்கும்போது புதிதாக படம் பார்ப்பது போலவே இருக்கும். அந்த வகையில், தற்போது இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சச்சின் பட வெற்றி, ஜெனிலியா தோழியாக நடித்தது நான் தான்.. திடீரென வெளியான வீடியோ | Sachin Movie Actress Video Goes Viral

இவரா?

இந்நிலையில், சச்சின் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடித்தவர். ரசிகர்கள் மத்தியில் திடீரென ட்ரெண்ட் ஆக தொடங்கி விட்டார். இவர் யார் என்று ரசிகர்கள் இணையத்தில் தேட தொடங்கி விட்டனர். அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து வைரலாக்கினர்.

தற்போது வைரலானதை தொடர்ந்து, அந்த நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " என் பெயர் ராஷ்மி. சச்சின் படத்தை இத்தனை ஆண்டுகளுக்கு பின் ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அதிலும் குறிப்பாக என்னை பலர் தேடி கண்டுபிடித்து வைரலாக்கி வருவது பெருமையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.