சச்சின் மகன் அர்ஜுன் நிச்சயம் செய்த சானியா சந்தோக் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா!
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
சமீபத்தில், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், கிரேவிஸ் குரூப் நிறுவனரான ரவி காய் பேத்தி சானியா சந்தோக் ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிச்சியம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது. அர்ஜுன் மற்றும் சானியா சந்தோக் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், சானியா சந்தோக் குடும்பத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சானியா சந்தோக் குடும்பத்தினர் மும்பையில் உள்ள இன்டர்காண்டினண்டல் ஹோட்டல் உரிமையாளர்களாவர். மேலும், குவாலிட்டி மற்றும் ப்ரூக்லின் ஐஸ் க்ரீம் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் மூலம், இவர்களுக்கு ஓராண்டு வருமானம் மட்டும் ரூ.624 கோடி என தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, சானியா சந்தோக் பெட் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மதிப்பு மட்டும் ரூ.4.37 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.