கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
சச்சின் டெண்டுல்கர்
இந்தியர்களின் மனம் கவர்ந்த விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று கிரிக்கெட். இந்த கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவில் உள்ள பல கோடி பேர் பார்க்க காரணமாக இருந்த நபர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர்.
இவரை கிரிக்கெட் கடவுள் என்று தான் அடையப்படுத்துவார்கள். தனது காலகட்டத்தில் கிரிக்கெட் வரலாற்றிலேயே யாராலும் செய்யமுடியாத சாதனையெலாம் செய்துகாட்டியவர் சச்சின். சர்வேதேச கிரிக்கெட்டில் 100 சத்தங்களை அடித்த ஒரே வீரர் இவர் தான்.
1989ம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய இவர் 2013ம் ஆண்டு அதிலிருந்து ஓய்வு பெற்றார். தல தோனியை பல கோடி பேர் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடினாலும், தோணியே தன் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடிய கிரிக்கெட் வீரர் சச்சின் தான்.
சமீபத்தில் நடந்த Masters League-ல் கூட பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இந்த Masters League போட்டியில் இந்திய அணி கோப்பையையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் இன்று கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 52வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சச்சின் டெண்டுல்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1250 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.