நெறியாளரை நான்சென்ஸ் என்று திட்டி கேமராவை ஆஃப் செய்த சத்குரு.. வைரல் வீடியோ..

Trending Videos
By Edward Jun 11, 2022 09:20 AM GMT
Report

கோபம்பத்தூரில் யோகா அமைப்பு என்ற பெயரில் காடுகளை அழித்து சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று விமர்சிக்கப்பட்டு வருபவர் ஜக்கி வாசுதேவ்.

இந்திய முன்னணி ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சுற்றுசூழல் சார்ந்து அக்கறையோடு செயல்படக்கூடிய ஈஷா அறக்கட்டளை மீது , சுற்றுசூழல் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது? இதுபற்றி உங்கள் கருத்து என்ன கேட்கப்பட்டது.

இதை எத்தனை முறை கேட்பீர்கள் என்று சத்குரு கூறியுள்ளார். மேலும், சுற்றுசூழல் அனுமதியை கட்டிய பிரகு வாங்க ஏன் முயல வேண்டும்? முன்பே வாங்கியிருக்கலாமே என்றும் கேட்கப்பட்டது.

அதற்கு சத்குரு, நாட்டில் அரசாங்கம் உள்ளதா? சட்டம் இருக்கிறதா? அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியதோடு வாயில் கையை வைத்து உஸ்ஸ்... என்று நெறியாளரை பார்த்து கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து 3 கேமராவை ஆஃப் செய்ய தன் பணியாளர்களிடம் கூறியது அதை அவர்களே ஆஃப் செய்துள்ளனர். மேலும் நெறியாளரை பார்த்து நான்சன்ஸ் என்று கூறி திட்டியும் இருக்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.