சினிமாவுக்கு வந்த புதிதில் அதை எல்லாம் பண்ண சொன்னாங்க..மோசமான அனுபவம் குறித்து பேசிய சாய் தன்ஷிகா

Dhansika Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 12, 2024 02:30 PM GMT
Report

மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சாய் தன்ஷிகா ஆனால், அந்த கதாபாத்திரம், பேசப்படவில்லை. இதையடுத்து ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் நடித்தார்.

அந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

சினிமாவுக்கு வந்த புதிதில் அதை எல்லாம் பண்ண சொன்னாங்க..மோசமான அனுபவம் குறித்து பேசிய சாய் தன்ஷிகா | Sai Dhanshika Feel Insecure In Cinema

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாய் தன்ஷிகா, பல விஷயங்களை பகிர்ந்துள்ளர். நான் தமிழ் பொண்ணு வல வல னு பேசுவேன், ஆனால் என்னை அப்படி எல்லாம் பேசுக் கூடாது, இப்படி தான் பேசணும் என்று சொன்னார்கள்.

மேலும் நான் பிரவுன் கலரில் இருப்பேன். அதனால் என்னை அதிகம் மேக்கப் போட சொல்வார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் என்னை insecure -ஆக பீல் செய்ய வைத்தது. ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை நிறைய மாறிவிட்டது சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.