விஜய் தான் அதற்கு சிறந்தவர்.. சாய் பல்லவி என்ன இப்படி சொல்லிட்டாங்க

Vijay Sai Pallavi Tamil Actress
By Bhavya Feb 09, 2025 08:30 AM GMT
Report

சாய் பல்லவி

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.

இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

விஜய் தான் அதற்கு சிறந்தவர்.. சாய் பல்லவி என்ன இப்படி சொல்லிட்டாங்க | Sai Pallavi About Vijay

இவர் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது நாக சைதன்யாவுடன் `தண்டேல்` படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது

நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்ட சாய் பல்லவி தண்டேல் படத்தின் நிகழ்ச்சியின் போது பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

என்ன இப்படி சொல்லிட்டாரு

அதில், "எனக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும் அதை விட நடனம் நன்கு ஆட தெரிந்தவர்கள் உடன் ஆடுவது அதை விட மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தான் சிறந்த டான்ஸர்" என்று தெரிவித்துள்ளார்.     

விஜய் தான் அதற்கு சிறந்தவர்.. சாய் பல்லவி என்ன இப்படி சொல்லிட்டாங்க | Sai Pallavi About Vijay