கல்கி படத்திலிருந்து வெளியேறிய தீபிகா படுகோன்.. அவருக்கு பதிலாக இந்த முன்னணி நடிகை நடிக்கிறாரா?
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் கல்கியை சுமக்கும் தாயாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஆனால், தற்போது அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் எது உண்மையான காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில், தீபிகா படுகோனுக்கு பதிலாக சுமதி கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க இயக்குநர் நாக் அஸ்வின் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே ராமாயணா எனும் பிரம்மாண்ட திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, கல்கி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.