விஜய் தேவரகொண்டாவா வேண்டவே வேண்டாம்.. பேர் கேட்டாலே ஓடும் டீச்சர் நடிகை..
மலையாள சினிமாவில் 2015ல் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சாய் பல்லவி. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததற்கு சாய் பல்லவியின் ஒரு நடிப்பு தான் மிகமுக்கிய காரணமாக அமைந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி சமீபத்தில் விரத பர்வம் என்ற ராணா படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கில் உருவாகி வெளியான கார்கி படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா படங்களில் நடிக்க போவதில்லை என்றும் குடும்ப கதாபாத்திரத்தை மையமாக கொண்ட படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க முடியாது என்று சாய் பல்லவி கூற என்ன காரனம் என்று கேட்டதற்கு, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாவுக்கு முன் நடிக்க என்னிடம் தான் கேட்டார்கள்.
ஆனால் அப்படத்தில் முத்தக்காட்சி, க்ளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகளும் அதிகமாக இடம் பெரும் என்று கூறியதால் தான் அப்படத்தில் நடிக்கவில்லை. அதோடு அவர் படம் என்றால் நெருக்கமான காட்சிகள் இருக்கும். அதனால் தான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி கூறியுள்ளாராம்.