அந்த விஷயத்தில் நயன்தாராவை ஓரங்கட்டிய முன்னணி நடிகை.. யார் தெரியுமா

Nayanthara Sai Pallavi
By Kathick Mar 02, 2025 12:30 PM GMT
Report

நடிகை நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் அடுத்ததாக டெஸ்ட் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வரிசையாக வெளிவரவுள்ளது.

20 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் கடந்த நிலையிலும், முன்னணி நடிகையாக இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுத்து வருகிறார். மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை இவர் சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த விஷயத்தில் நயன்தாராவை ஓரங்கட்டிய முன்னணி நடிகை.. யார் தெரியுமா | Sai Pallavi Overstakes Nayanthara In Salary

இந்த நிலையில், தற்போது நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் இடத்திற்கு பிரபல முன்னணி நடிகை வந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை சாய் பல்லவி தான். கடந்த ஆண்டு அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சாய் பல்லவி நடித்து வரும் திரைப்படம் தான் ராமாயணா.

சரித்திர கதையை மையப்படுத்தி எடுத்து வரும் இப்படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்க இவர் ரூ. 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் நயன்தாரா விட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சாய் பல்லவி மாறியுள்ளார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விஷயத்தில் நயன்தாராவை ஓரங்கட்டிய முன்னணி நடிகை.. யார் தெரியுமா | Sai Pallavi Overstakes Nayanthara In Salary