ராமாயணா திரைப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா

Sai Pallavi Ranbir Kapoor
By Kathick Jul 08, 2025 02:30 AM GMT
Report

சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரபாஸ் கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆதிபுருஷ் எனும் படத்தில் ராமராக நடித்திருந்தார்.

ராமாயணா திரைப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா | Sai Pallavi Ranbir Kapoor Salary For Ramayana

அந்த வரிசையில் தற்போது ரன்பிர் கபூர் ராமராக நடித்து வரும் ராமாயணா திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் டிவாரி இயக்கி வருகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிக்க, சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் ராவணனாக கேஜிஎப் யாஷ் நடிக்கிறார்.

ராமாயணா திரைப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா | Sai Pallavi Ranbir Kapoor Salary For Ramayana

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் Hans Zimmer ஆகிய இருவரும் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இது இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியுள்ளது.

ராமாயணா திரைப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா | Sai Pallavi Ranbir Kapoor Salary For Ramayana

இப்படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படம் ரூ. 1600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுவதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ராமாயணா திரைப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா | Sai Pallavi Ranbir Kapoor Salary For Ramayana

இந்த நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தில் நடிப்பதற்காக ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ராமராக நடிக்க நடிகர் ரன்பீர் கபூர் ரூ. 150 கோடி சம்பளமும், சீதாவாக நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ. 12 கோடி சம்பளமும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமாயணா திரைப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா | Sai Pallavi Ranbir Kapoor Salary For Ramayana

ஆனால், சம்பளம் குறித்து வெளிவந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.