சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி.. ரஜினியுடன் நடிக்க இத்தனை கோடியா?
Rajinikanth
Sai Pallavi
By Kathick
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தலைவர் 173. கமல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்கவிருந்த நிலையில், திடீரென அவர் வெளியேறிவிட்டார்.
தற்போது அவருக்கு பதிலாக பிரபல இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரவுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக அவர் ரூ. 15 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.