விஜய், அஜித்துக்கு அந்த விஷயத்தில் நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம் என்ன தெரியுமா

Ajith Kumar Vijay Sai Pallavi
By Kathick May 14, 2025 04:30 AM GMT
Report

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சாய் பல்லவி பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே, அப்படத்தில் சாய் பல்லவி நடிப்பார். அப்படி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால், அப்படத்தை நிராகரித்துவிடுவார்.

விஜய், அஜித்துக்கு அந்த விஷயத்தில் நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம் என்ன தெரியுமா | Sai Pallavi Says No To Ajith Vijay Movies

அப்படி சாய் பல்லவி நிராகரித்த படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் லியோ திரைப்படத்தில் த்ரிஷா நடித்த கதாநாயகி ரோலில் முதலில் நடிக்கவிருந்தது சாய் பல்லவி தான். ஆனால், அந்த கதாபத்திரம் தனக்கு ஏற்றதாக இருக்காது என கூறி, அப்படத்தை நிராகரித்துவிட்டாராம்.

அதே போல் அஜித்தின் வலிமை, விஜய்யின் வாரிசு ஆகிய படங்களில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவிருந்துள்ளார். ஆனால், அப்படங்களில் கதாநாயகி ரோலுக்கு பெரிதும் முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் நிராகரித்துள்ளார்.