இன்னொரு காருக்காக முத்தகாட்சி பண்ணமாட்டேன்? சாய் பல்லவி பேட்டியின் பின்னணி..
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தற்போது ராமயணா படத்தில் சீதை ரோலில் நடித்து வரும் சாய் பல்லவி, முத்தக்காட்சியோ அல்லது எல்லைமீறிய காட்சியிலோ நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் அளித்த பேட்டியில், எனக்கு காதலன் இருந்தால், அது நடிப்பாக இருந்தாலும் வேறொருவருக்கு முத்தம் கொடுக்கமாட்டேன். நிம்மதியாக வாழ ஒரு குடும்பம், வீடு, கார் இருந்தாலே போதும். இன்னொரு கார் வாங்குவதற்காக மட்டுமே நான் திரையில் முத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நடிப்புக்கு மட்டுமே என்னை அணுகுங்கள், நெருக்கமான காட்சிகளுக்கு வேறு ஆளைப்பாருங்கள் என்று கூறியதாக அவரை பாராட்டி வந்தனர்.
ஆனால், எனக்கு எந்தமாதிரி உடைகள், காட்சிகள் செளகரிமாக இருக்கிறதோ, அதில் மட்டுமே நடிப்பேன், அது என் தனிப்பட்ட விருப்பம் என்று மட்டுமே என்று கூறியிருந்தார்.
அவர் கார், வீடு, காதலன் என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.