திருமணத்திற்கு தயாராகும் நடிகை சாய் பல்லவி.. செம கடுப்பில் ரசிகர்கள்

Sai Pallavi
By Kathick May 08, 2022 04:25 PM GMT
Report

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இதன்பின் தியா படத்தின் மூலம் தமிழிலும் கால்பதித்தார். தொடர்ந்து மாரி 2, NGK உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இந்நிலையில், தற்போது சாய் பல்லவி எந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதனை நிராகரித்து வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறியபோது " தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. சாய் பல்லவி என்றால், நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

அதனால், நல்ல கதைக்காக நான் காத்திருக்கிறேன் " என்று கூறியுள்ளார். ஆனால், தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் சாய் பல்லவி திருமணம், அதனால் தான் அவர் படங்களை நிராகரித்து வருகிறார் என கூறுகிறார்கள்.