31 வயதில் திருமணம் செய்யாத அக்கா சாய் பல்லவி!! வருங்கால கணவரை காதலராக்கிய தங்கை பூஜா..
மலையாளத்தில் கடந்த 2015 வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தத படம் பிரேமம். இப்படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி.
பிரேமம் படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
31 வயதான சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். சமீபத்தில் கூட சமுத்திரகனி நடிப்பில் வெளியான சித்திரம் செவ்வானம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகினார் பூஜா.
தற்போது தன் காதலரை முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் பூஜா கண்ணன். அக்கா சிங்கிளாக இருக்கும் போது தங்கை பூஜா கண்ணன் காதலருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
விரைவில் பூஜாவும் அவரது காதலருன் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.