திரிஷா பெயரில் பேரவை, அடுத்து என்ன அரசியலா?
Trisha
By Tony
திரிஷா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 40 வயது தாண்டி இன்றும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீப காலமாக திரிஷா எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் உள்ளார். இவர் குறித்து சமீப காலமாக அரசியல் களத்தில் பல சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கிறது.

மேலும் இவர் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் கூட நிற்க உள்ளதாக பல வதந்திகள் உலா வருகிறது. இந்த நிலையில் தற்போது திரிஷா பெயரில் இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை என்று ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதை பார்த்த பலரும் அட இது என்னடா ...இவரும் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.