திருமணமான கையோடு பிக் பாஸ் சாக்ஷி கணவருடன் ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட்
சாக்ஷி
நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
பின், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு அதன் மூலம் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். கவின் மற்றும் லாஸ்லியா காதல் ட்ராக் காரணமாக, சாக்ஷி அகர்வால் அந்த சீசனில் ஏற்படுத்திய பிரச்சனைகளை பிக் பாஸ் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
சாக்ஷி அஜித்தின் விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கைவசம் கெஸ்ட், சாப்டர் 2 மற்றும் தி நைட் ஆகிய படங்கள் உள்ளன.
ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட்
34 வயதாகும் சாக்ஷி திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், இந்த ஜனவரி மாதம் 4 - ம் தேதி தன்னுடைய சிறு வயது நண்பர், நவ்நீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. தற்போது திருமணமான கையோடு தன்னுடைய கணவருடன் சாக்ஷி எடுத்துக் கொண்ட ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,