நான் வெளியேறியதற்கு விஷால் காரணமா?.. மௌனம் கலைத்த தர்ஷிகா, உண்மை இதுதான்
பிக் பாஸ் சீசன் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து விறுவிறுப்பான டாஸ்க், அதிரடி என்ட்ரி என பிக்பாஸில் எந்த சீசனிலும் நடக்காத விஷயங்கள் பல நடந்து வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து சீரியல் நடிகை தர்ஷிகா எலிமினேட் செய்யப்பட்டதற்கு விஷால் தான் காரணம் என்று ரசிகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
உண்மை இதுதான்
இந்நிலையில், தர்ஷிகா தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் இந்த சர்ச்சை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்கிறேன்.
அதற்காக வேறு யாரையும் குற்றம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நான் வேண்டுமென்று யாரையும் தவறாக வழிநடத்தவில்லை. பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதை நான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்க வேண்டும்.
அதுவும் அந்த இடத்திலேயே கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்கள் இதை வைத்து ட்ரோல் செய்வதையும், கிண்டல் செய்வதையும் தவிர்த்து விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.