பெருமாளே புரட்டாசி மாசம் அதுவுமா இப்படியா? நடிகை சாக்ஷி அகர்வால் குமுறல்!
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
பிக்பாஸ் முடிந்து பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படியா?
இந்நிலையில், தற்போது சாக்ஷி அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, சாக்ஷி அகர்வால் ஸ்விகியில் பாலக் பன்னீர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பன்னீர் ரைசுக்கு பதில் அதில் சிக்கன் துண்டுகள் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சாக்ஷி அதை போட்டோ எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'நான் பிறந்ததில் இருந்தே, அசைவம் சாப்பிட்டது இல்லை. ஆனால், இந்த ஸ்விகி இன்று என்னை அசைவம் சாப்பிட வைத்துவிட்டது' என ஸ்விகி நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார்.