அவகளுக்கு ஆப்பு வைக்க வேண்டும்!! யூடியூபர்களை வெளுத்து வாங்கிய வைகைப்புயல் வடிவேலு..

Vadivelu Robo Shankar Gossip Today
By Edward Sep 22, 2025 02:30 AM GMT
Report

நடிகர் ரோபோ ஷங்கர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை பல பிரபலங்கள் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் வடிவேலு, நடிகர்களை பற்றி தவறாக பேசும் யூடியூபர்ஸ்கள் மீது நடவடிக்கை தேவை என்று தெரிவித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நடிகர் வடிவேலு

அதில், ரோபோ ஷங்கர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்று நான் ஊரில் இல்லை, ஒருநாள் வீட்டுக்குச்சென்று பார்த்து வருவேன், நமக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும்.

அவகளுக்கு ஆப்பு வைக்க வேண்டும்!! யூடியூபர்களை வெளுத்து வாங்கிய வைகைப்புயல் வடிவேலு.. | Vadivelu Condemns Youtubers Demands Action Shankam

பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நம் கலைஞர்களை தவறாகப்பேசி, சிறிதளவு விஷயத்தை பெரியளவில் ஊதிப்பெரிதாக்கி விடுகிறார்கள் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. இன்னும் நிறைய யூடியூபர்ஸ் இருக்கிறார்கள்.

ஆப்பு வைக்க வேண்டும்

அவர்களுக்கும் சீக்கிரமாக நடிகர் சங்கத்தின் சார்பில் ஆப்பு வைக்க வேண்டும். இந்த படத்தை பற்றி பேசு, அந்த படத்தைப்பற்றி பேசு என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலர் இதை செய்கிறார்கள். இதற்கு நடிகர் சங்கத்திலும் சிலர் உடந்தையாக இருக்கிறார்கள்.

இதனை நடிகர் சங்கத்தில் யாரும் கண்டிப்பதில்லை, இப்படி பேசி வருபவர்களை போர்க்கால அடைப்படையில் உண்டுயில்லாமல் ஆக்கவேண்டும். நடிகர் சங்கம் என்பது நடிகர்களை பாதுகாப்பதுதான்.

திரைக்கு வெளியிலும் விட்டுவைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது விமர்சனம் செய்கிறார்கள். சினிமாவை 10 பேர் சேர்ந்து அழித்துவருகிறார்கள் என்று வடிவேலு பேசியுள்ளார்.