ரிலீஸ் ஒரு பக்கம் இருக்கட்டுமே!! பராசக்தி பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் தான் பராசக்தி.

சென்சார் சான்றிதழ்
ஜனநாயகன் 9 ஆம்தேதி ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் சென்சார் சான்றிதழ் பிரச்சனையில் படத்தில் ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளது. ஆனால் இன்னும் பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் அளிப்படவில்லை.
ஆனால் எப்படியும் சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இரு படங்களும் சென்சார் சான்றிதழ் வாங்குவதில் மும்முரமாகவும் இருக்கிறார்கள்.
பராசக்தி சம்பளம்
இந்நிலையில் பராசக்தி படத்திற்கு நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் மொத்த சுமார் ரூ. 141 கோடி என்றும் அதில் சிவகார்த்திகேயனுக்கு ரூ.30 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,
நடிகர் ரவி மோகனுக்கு ரூ.16 கோடியும் இயக்குநர் சுதா கொங்கராவுக்கு ரூ.15 கோடியும் அதர்வாவுக்கு ரூ.2 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.