காசு அதிகமா கொடுத்தா போதும்!.. எப்படிவேணாலும் ஓகே தான் கூறிய நடிகை

Tamil Actress
By Edward Oct 16, 2021 11:17 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு சம்பள உயர்வுக்காக எப்பவேண்டுமானாலும் நடிக்க தயாராகிறார்கள்.

சினிமாவிற்கு வந்த புதிதில் கவர்ச்சி காட்ட மாட்டேன், குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறி திரையுலகில் நுழைந்தவர் தான் அந்த வாரிசு நடிகை. அதேபோல் ஆரம்பத்தில் அவர் நடித்த படங்களில் மிகவும் நாகரிகமாகவே நடித்திருந்தார். படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகைக்கு நல்ல வரவேற்பை கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் அதிக சம்பளம் கொடுப்பதால் வாரிசு நடிகையும் தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் நடிகை புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சற்று கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்டுள்ளார். முதலில் தயங்கிய நடிகை பின்னர் அதிக சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என கூறியுள்ளார். தயாரிப்பாளரும் நடிகை கேட்டதுபோலவே அந்த காட்சிக்கு மட்டும் கூடுதல் சம்பளம் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி வேண்டாம் என கூறி வந்த நடிகை அதிக சம்பளத்திற்காக கவர்ச்சி காட்சிக்கு ஓகே சொன்ன செய்தி டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் காட்டு தீ போல பரவி வருகிறது.