56 வயதில் பிரபல நடிகையுடன் ரகசிய திருமணம்? வைரலாகும் சல்மான் கான் புகைப்படம்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இந்திய சினிமாவில் அதிக சம்பளமும் சொத்து மதிப்பும் கொண்ட நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சல்மான் கான். 56 வயதாகும் நடிகர் சல்மான் கான் இதுவரையில் தனிமரமாக இருந்து திருமணமாகாமல் இருந்து வருகிறார். அதற்கு காரணம் அவர் வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகள் தானாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி படங்கள் என பிஸியாக இருந்து வரும் சல்மான் கான் நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் ஆரம்பகால சினிமாவில் காதலில் இருந்து பிறகு பிறந்தார். அதன்பின், சோமி அலியுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். இதையடுத்து பெரியளவில் காதல் சர்ச்சையில் நடிகை பரினா அலாமுடன் சல்மான் கான் லிவ்விங் டுகெதரில் இருந்தார்.
மிஸ் வேல்ட் பட்டத்தை வென்று சினிமாவில் அறிமுகமாகி காலகட்டத்தில் 1999ல் இருந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து டின்னர் டேட்டிங் என்று சுற்றி வந்ததாக செய்திகள் வெளியானது. பல ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் ஜோடியாக கருதப்பட்டவர்கள் நடிகை காத்ரீனா கைஃப் - சல்மான் கான் ஜோடி தான்.
பல படங்களில் ஜோடியாக நடித்த இருவரின் கெமிஸ்ட்ரியும் ஒர்க்கவுட்டானதை அடுத்து இருவரும் திருமணம் செய்ய போகும் அளவிற்கு சென்று அதன்பின் பிரிந்தனர். சமீபத்தில் கேத்ரீனா கைஃப் நடிகர் விக்கி கெளசலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்திய காதலாக நடிகை சோனாக்ஷி சின்காவுடன் இருந்து வந்ததாக செய்திகள் வெளியானது. அதிலும் சில நாட்களுக்கு முன் இருவரும் ரகசியமாக மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர் என்ற செய்தியும் வெளியானது.
தகவலோடு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் போல் இணையத்தில் இரு பிக் வைரலாகி டிரெண்ட்டானது. ஆனால் அது உண்மையில்லை என்று பாலிவுட் வட்டார சினிமா மீடியாக்கள் கூறி வருகிறார்கள்.