பொது இடத்தில் முன்னாள் காதலியின் கணவரை அசிங்க படுத்திய சல்மான் கான்!.. இதோ வீடியோ
பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் சல்மான் கான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது இவர் டைகர் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார்.
சல்மான் கான் நடிகை கத்ரீனாவை காதலித்தாக சொல்லப்பட்டது. இவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின்னர் கத்ரீனா கைப் நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் விக்கி கவுசல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதே நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றுள்ளார் அப்போது விக்கி கவுசல் சல்மான் கானுடன் பேச முயன்றார் ஆனால் அவர் பார்த்தும் பார்க்காதது போல சென்றுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Vicky Kaushal ☹️
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 26, 2023
pic.twitter.com/4O5dNJCnt8