ஐஸ்வர்யா ராயை அடித்தார்!! என்னை கொடுமைப்படுத்தினார்.. சல்மான் கான் பற்றி பகீர் கிளப்பிய நடிகை..
சோமி அலி
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து சமூக ஆர்வலராக இருந்து வருபவர் சோமி அலி. சல்மானுடன் 8 ஆண்டுகள் காதலில் இருந்த சோமி அலி, கருத்துவேறுபாட்டால் அவரைவிட்டு பிரிந்து 'நோ மோர் டியர்ஸ்' என்ற என் ஜி ஓ அமைப்பினை நிறுவி ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கும் உதவி வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் சல்மான் கான் என்னை துன்புறுத்தியதுபோல் யாரையும் துன்புறுத்தவில்லை. சங்கீதா, கேத்ரினா நான் சல்மான் கானால் அனுபவித்த பாதியைக்கூட அவர்கள் அனுபவித்திருக்கமாட்டார்கள். ஐஸ்வர்யா ராயை மிகவும் துன்புறுத்தினார்.
சல்மான் கான் டார்ச்சர்
ஐஸ்வர்யாவின் தோள்பட்டையை மிகவும் காயப்படுத்தினார் சல்மான் கான். ஆனால் கேத்ரீனாவை என்ன செய்தார் என எனக்குத்தெரியவில்லை. சல்மான் கான் எனக்கு செய்ததை ஒப்பிடும்போது லாரன்ஸ் பிஷ்னோய் எவ்வளவோ மேலானவர் என நினைக்கிறேன்.
ஒருமுறை சல்மான் கான் என்னை மிகவும் கொடூரமாக தாக்கியபோது, என் வீட்டு பணியாளர் அடிக்க வேண்டாமென கதவினை தட்டினார். அந்தளவுக்கு தாக்கினார். தீவிரமான முதுகு வலியால் நெடுநாள் படுத்தபடுக்கையானேன்.
அப்போது என்னைப்பார்க்க வந்த நடிகை தபு அழுதேவிட்டார், ஆனால் சல்மான் கான் அப்போதும் என்னை பார்க்க வரவில்லை. நான் அனுபவித்த கடுமையான துயரம் என் அம்மா, நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும், இதுபற்றி விரிவாக புத்தகம் எழுதி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.