2900 கோடி சொத்து!! பல நடிகைகளுடன் காதல்!! 59 வயதிலும் முரட்டு சிங்கிள்..
சல்மான் கான் 59
பாலிவுட் சினிமாவில் டாப் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் சல்மான் கான் டிசம்பர் 27 ஆம் தேதியோடு 59 வயதை எட்டியிருக்கிறார். 59 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருந்தாலும் அவருடன் நடித்த பல நடிகைகளுடன் அவர் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அப்படி டாப் நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கியும் வெளியேறியிருக்கிறார்.
நடிகைகளுடன் காதல்
80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் இணைந்து நடித்தப்போது நெருக்கம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் காதலில் இருந்தனர். பின் திடீரென பிரேக்கப் செய்து நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடித்த சல்மான் அவருடன் அவுட்டிங் என்று சுற்றித்திரிந்தார். ஒருக்கட்டத்தில் சல்மான் கானிடம் இருந்து விலகினார் ஐஸ்வர்யா ராய்.
நடிகை கேத்ரினா கைஃபுடன் ஜோடியாக பொது நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி என பல இடங்களில் சுற்றியதால் கிசுகிசுக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் காதல் கைக்கூடாமல் பிரிந்தனர்.
ரோமானிய தொலைக்காட்சி தொகுப்பாளினி லுலியா வந்தூர் என்பவரை காதலிப்பதாக செய்திகள் பரவியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் பரவியது. ஆனால் சல்மான் கானுடம் அந்த தொகுப்பாளினியும் தங்கள் உறவை உறுதிப்படுத்தாமலே பிரிந்துவிட்டனர்.
அமெரிக்க நடிகை சோமி அலியுடன் சல்மான் கான் பல ஆண்டுகள் உறவில் இருந்து பின் பிரிந்தனர். சமீபத்திய பேட்டிகளில் கூட சல்மான் கானுடனான காதல் பற்றி சோமி அலி பேசி வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, படங்கள் உள்ளிட்டவைகளில் நடித்து இதுவரை 2900 கோடி ரூபாய் சொத்து மதிப்பினை வைத்திருக்கிறார் நடிகர் சல்மான் கான்.