சமந்தா சம்பளம் 500 ரூபாயா? ஷாக் கொடுத்த செய்தி

Samantha
By Kathick Jul 07, 2022 09:15 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகி நடிகை சமந்தா. இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும், தமிழில் இவர் நடித்துள்ள சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பல கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நடிகை சமந்தா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை சமந்தா முதன் முதலில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் தானாம். முதன் முதலில் 500 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ள நடிகை சமந்தா தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.