பிரசவ வலி, நடிகை சமந்தா எமோஷனல்

samantha pregnancy
By Kathick Jan 27, 2022 03:30 PM GMT
Report

தொடர்ந்து சில மாதங்களாவே சமூக வலைத்தளத்திலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது, நடிகர், நடிகைகளின் விவாகரத்து குறித்து தான். அதிலும், சமந்தா மற்றும் நாகசைத்தன்யா ஜோடி கருத்து வேறுபாட்டினால், விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்தது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், தற்போது மீண்டும் இருவரும் இணையவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் பெண்களின் பிரசவ வலி குறித்து பேசியுள்ளார்.

இதில், " பெண்களின் பிரசவம் தான் உலகிலேயே மிகவும் வலி உடையது. அந்த வலியையும் தாங்கிக் கொண்டு குழந்தை பெறுகிறார். ஆனால் அதே நேரத்தில் பெற்ற குழந்தையை பார்த்தவுடன் தனது வலி எல்லாம் மறந்து அந்த பெண்ணின் முகத்தில் சிரிப்பு உண்டாகிறது " என கூறியுள்ளார்.